Monday, 12 December 2011

இதுதான் இவன்...


வேடிக்கைக்காய் கூடி
பேடிக்கையாய் பேசி
வாடிக்கையானதென் 
வாழ்வுதனில் ...


வாடிக்கையான 
வசைவுகளும்
வரையறையற்ற‌
வம்புகளும்...


வளையொழியெலி போல்
வலம் வெளி 
வரவழி தெரியாது
வதைபட்டேன் !!!


காணவேண்டும் விடை
பேணவேண்டும் பெயர் 
கோணவேண்டும்(அவர்) மனம்
என்றெல்லாம்
கோரவில்லை இறைவனிடம்...


நாடிவந்த நங்கையோ
பேடியென்று நல்கிவிட்டு
ஓடிவிட்டாள் ; நல்லது
தேடிச்சென்று வஞ்சம்
தீர்க்கவில்லை ...
தெய்வத்திடம் கேட்கவில்லை...


வாடித்தான் நின்றேன்;
வரண்டுதான் மனம்...
தேடித்தான் கொன்டேன் 
இவ்வளவும்...
தேவைதானே ???


இன்னும்,
வேண்டாம் ,வேண்டாம்
தூண்டாதீர் என்னை
தோண்டாதீர் புண்ணை...


இப்படியே
   விட்டுவிடும்
இதன்
   வழிதனையே
இப்படிக்கு
   இவன்
இளமாறன்...

No comments:

Post a Comment