Tuesday 13 December 2011

அணில்...


அன்றொரு நாள் அந்திவேளை
அவர்களெல்லாம் ஆடச்சென்றார்
அட துடுப்பாட்டம்...

அங்கிருந்த அணில்கூட‌
ஆசையுடன் அங்குசெல்ல...

அதன்முன்பு ???

அணிலங்கு
ஆசையுடன்
அதுவாங்கி
அட...சைக்கிள்தான்

அவ்வப்போது குருவுடனே
ஆலோசனை பெற்றுக்கொண்டு
ஆரம்பித்த சைக்கிளோட்டம்
ஐயகோ என் சொல்வேன் ???

அணிலின்...
சைக்கிளிற்கு சில்லுமுண்டு
பையினிலே செல்லுமுண்டு
கையினிலே கான்டிலுண்டு
கை கொடுக்க குருவுமுண்டு

கும்பிட்டுக் கொண்டு
குருவிடம் விடைபெற்று
தம்விட்டுக் கொண்டு
தரணிவரும் நாளினிலே...

எம்புட்டுப் பேர் அணிலை
ஏளனம் செய்தாலும்
அம்புட்டுப் பேரையும்
அசட்டையேதும் செய்யாமல்

கமக்கட்டில் மேல் (B)பார்
க......ல் கீழ் (B)பார்
....ம்ம்ம்...பயிற்சியோட்டம்

குருவின் வழிகாட்டல்
குறையேதும் இல்லையென்பேன்
குருவிற்கு தட்சணையாய்
குவாட்டர் உபயம்
குதூகலத்தில் தினமொன்று

குற்றால அருவியாய்
குதித்தது அணிலிங்கு
கொழும்பு போகுமுன்பு
கோ(ர்)சை(சைக்கிள்) முடிப்பேனென்று
கோமணமும் கட்டாமல்
குறைவிலா சைக்கிளோட்டம்

கோ(ர்)சை முடிக்குமுன்பே
ஆசை பிடித்துக்கொள்ள‌
பே(ர்)சை பார்த்துவிட்டு
காசை கவனியாமல்
ஆசையுடன் ஆரம்பம்

அன்றும் அப்படித்தான்
என்றும் போலத்தான்
மன்றம் வந்தது
தென்றல் வீசுமந்த‌
குன்றும் குழியுமான தெருவினிலே...

அப்போது...
தெருவின் கரையோரம்; மருவிக் கரைசேரும்
அருவிக் கரைபோல அம்மூதாட்டி
பருகிக் களித்துக்கொண்டே துருவும் கண்களுடன்
கருவித் திரையோடு அணிலங்கு
பருவம் தவறியதை பாலான கண்சொல்ல‌
இருமிக் கழித்துக் கொண்டே...இயல்பாக‌


சைக்கிள் கான்டிலங்கு
சத்தியமாய் சரியாய்தான்
சங்கதியின் போது
சரித்தது அணிலங்கு...
(பிறேக் பிடிக்கவில்லை...பின் அணில் கூற...)

கிழவியின் பின்பக்கம்
குழவியின் முன்சில்லு‍ -கிழவி
அழக்கூட முடியாது
ஐயகோ(என்று)  கன்னடத்தில்...

சகதியின் நடுவினிலே
சத்தியமாய் கிழவியங்கு
சரி அணில் ???
கிழவியின் மேலேதான்
கிடந்தது அணிலங்கு

அப்ப சைக்கிள்???
மாமரத்தின் மேலே
மல்லாந்து கிடந்தது...

அட பின்பு...
முன்வாய் பல்லு
மூன்று இல்லை
முழங்காலில் சில்லு
முட்டாமல் முட்டியதில்
மூட்டு உடைந்து...
முன்னங்காலில்
மூன்றாம் விரலில்
மூவாறு தையல்...(முது தையலிற்கு)

அந்தோ பரிதாபம் !!!
ஆஸ்பத்திரி !
ஆயிரம் சோதனை...

      தண்டனை முடிவில் ?
      தவறியது கிழவி !!!
      தவித்தது அணில் !!!

இத்தனையும் முடிந்தபோது அத்தனையும் பார்த்துவிட்டு
மொத்தினர் முப்பதுபேர்...செத்தோம் சிவமென்று
சில லட்சம் செலவழித்து செவ்வனவே செத்தவீடு
செய்தது அணிலங்கு...

சத்தியமாய் செப்புகிறேன்
இத்தனையும் ஆனபின்பு
மொத்தியதை முழுமறந்து‍ -அணிலிங்கு
பத்தியத்தை மேற்கொண்டு
பவ்வியமாய் சைக்கிள்....
ஐயகோ மறுபடியும்.









1 comment:

  1. இது ஒரு உண்மைச்சம்பவம்.....

    ReplyDelete